இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நமீதா வில்லியாக நடித்த படம் இளைஞன். இந்த படத்திற்கு பிறகு நமீதா நடிப்பில் எந்த படமும் திரைக்கு வரவில்லை. ஆனால் அதையடுத்து மங்கை ஹரிராஜன் இயக்கத்தில் அவர் முக்கிய நாயகியாக நடித்துள்ள இளமை ஊஞ்சல் படமும் கடந்த 3 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்த படத்தில் நமீதாவுடன் மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி என பல நடிகைகளும் நடித்துள்ளனர்.
கிளாமரை முன்நிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை கடந்த ஆண்டு வரை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் நமீதா. ஆனால், படம் பைனான்ஸ் பிரச்சினையால் தள்ளாடிக்கொண்டிருந்ததால் சமீபகாலமாக அந்த படத்தில் தான் நடிப்பது பற்றிகூட அவர் யாரிடமும் சொல்வதில்லை. அந்த அளவுக்கு எதிர்பார்த்து எதிர்பார்த்து அவருக்கு ஏமாற்றமாகி விட்டது அதோட அப்படத்தில் நடிககும்போது ஓரளவு குண்டாக இருந்த நமீதா, இப்போது பல சுற்று பெருத்து ஆன்ட்டியாகி விட்டார்.
ஆனால் நமீதா எதிர்பார்க்காத இந்த நேரத்தில் இளமை ஊஞ்சல் படம் ரிலீசுக்கு தயாராகி நிற்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள அப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், ஐந்து கதாநாயகிகளும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி நடித்திருப்பதால் ஏகமனதோடு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்களாம். அதையடுத்து டிசம்பர் மாத இறுதிக்குள் படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று முயற்சிகள் நடக்கிறது.