'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
அனேகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பற்றியும் பேசினார்.... இதுவரை ஆக்ஷன் அடி,தடி படங்களை தான் நான் இயக்கியிருக்கிரேன். ஆனால் அனேகன் படத்தை ஒரு ரொமான்டிக் காதல் கதையாக இயக்கியிருக்கிறேன். இந்த கதை தயாரானதும் இதற்கு மிகவும் பொருத்தமானவர் தனுஷ் என்று தோன்றியது! அவரை பார்த்து கதையின் அவுட்லைனை கூட சொல்லவில்லை, அதற்குள்ளாகவே இக்கதையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு நடிகர் தனுஷ்! அவரை இப்படத்தில் மாறுபட்ட ஒரு தனுஷாக நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்றவர் அனேகன் படத்தின் கதையை கார்த்திக்கிடம் சொல்லப்போனபோது, அவர் இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார் என்று தன் உதவியாளரிடம் 1000 ரூபாய்பெட் கட்டிவிட்டு சொன்தையும், ஆனால் கதையைக் கேட்ட கார்த்திக் இம்ப்ரஸ்ஸாகி நடிக்க ஒப்புக் கொண்டதையும் சுவாரஸ்மாக விவரித்தார்.
தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிப் பேசிய கே.வி.ஆனந்த் அனேகன் படத்தின் கதாநாயகி அமீரா தஸ்தரைப் பற்றி பேச மறந்துபோனார். பிறகு சுதாரித்துக்கொண்டு பேசிய கேவி.ஆனந்த்,அமீரா, பார்ப்பதற்கு ஒரு லூஸ் பெண் மாதிரி இருப்பார். என்று ஆரம்பித்ததும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைய,ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. அவர் லூசு மாதிரி இருந்ததால்தான் நான் இப்படத்திற்கு அவரை தேர்வு செய்தேன். காரணம் இப்படத்தில் அவருடைய பாத்திரம் அப்படி! சிறப்பாக நடித்திருக்கிறார். தொடர்ந்து பேசி சமாளித்தார் கே.வி.ஆனந்த். அமீராவுக்கு தமிழ் தெரியாது என்பதால் கே.வி.ஆனந்த் பேசியது அவருக்கு புரியவில்லை. தனுஷ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல, அமீரா முகம் இருண்டது.