ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்து, விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனாக நடிக்கும் படம் புலிப்பார்வை, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனாக சத்யஜித் என்ற சிறுவன் நடிக்கிறான். ப்ரவீன்காந்த் இயக்கி உள்ளார்.
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர், மற்றும் பாடல்கள் வெளியானபோது. பாலச்சந்திரன் புலிகளின் சீருடை அணிந்து நடித்திருப்பதற்கும், துப்பாக்கி பயிற்சி பெறுவது போன்ற காட்சிக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் அவற்றை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டது. அதன்படி 15 நாட்கள் வரை மீண்டும் படபிடிப்பு நடத்தி புதிய காட்சிகளை படமாக்கி அதனை படத்தில் சேர்த்துள்ளனர். மீண்டும் எடுக்க முடியாத காட்சிகளில் கிராபிக்ஸ் மூலம் சீருடையை அகற்றி உள்ளனர்.
பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படம் இறுதியாக வருகிற 14ந் தேதி வெளிவருவதாக அறிவித்திருக்கிறார்கள்.