ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
திரைப்படக் கல்லூரியில் பயின்ற ராஜமித்ரன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் அய்யனார். தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகனாக ஆதியும், நாயகியாக மீரா நந்தனும் நடிக்கிறார்கள். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. கதைப்படி மீராநந்தன் வாலிபால் பிளேயர். வாலிபால் டீமில் விளையாடியிருக்கும் அவரது அப்பா, தன் மகளை எப்படியாவது வாலிபால் வீராங்கனை ஆக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் மீரா நந்தனுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. திடீரென்று ஒரு விபத்தில் தந்தை இறந்து விடுகிறார். இதையடுத்து தந்தையின் ஆசையை நிறைவேற்ற மீராநந்தன் வாலிபால் விளையாட தொடங்குகிறார். கடுமையான பயிற்சி மேற்கொள்ளும் அவருக்கு கோச்சராக ஹீரோ ஆதி வருகிறார். அப்போது இருவருக்குள்ளும் எப்படி காதல் வருகிறது? மீரா நந்தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாகியிருக்கிறதாம் அய்யனார் படம்.