ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராகினி எம்எம்எஸ்-2, ஜிசம்-2 படங்களின் மூலம் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை சன்னி லியோன். ஆபாசபட நடிகையான இவர், இப்போது ''லீலா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் பாபி கான் இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்து இருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் பாபி கூறுகையில், ''லீலா'' படம் முழுக்க முழுக்க குடும்ப படம். இதில் சன்னி லியோன் தான் முக்கிய ரோலில் நடிக்கிறார். குடும்ப படத்தில் சன்னி லியோனுக்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம், இது குடும்ப படம் என்றாலும், படத்தில் சன்னியின் கிளாமர் நடிப்பு உச்சமாக இருக்கும். ஆனால் அது படம் முழுக்க இருக்காது, சில காட்சிகள் மட்டுமே இருக்கும். அதனால், முடிந்தளவுக்கு இப்படத்திற்கு யு/ஏ சான்று பெற பார்ப்போம். லீலா படம் ராஜஸ்தானை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. படத்தில் சன்னி லியோன் மூன்று விதமான கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயமாக இந்தப்படத்திற்கு பிறகு, சன்னி லியோனுக்கு ஒரு பெரிய பிரேக் கிடைக்கும். அந்தளவுக்கு அவரை மாற்றியுள்ளோம். சொல்லப்போனால் அவரை நம்மூர் பாலிவுட் ஹீரோயின் போன்று மாற்றியுள்ளோம். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார் பாபி.