ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் நாயகி ரெஜினா தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான 'பவர்' படத்தில் முன்னணி நடிகரான ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் ஹன்சிகாதான் முக்கியமான கதாநாயகி என்றாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் நாயகியாக ரெஜினா நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை 'நச்' என உருவாக்கியிருக்கிறாராம் இயக்குனர். அந்த 'நச்'சில் முத்தக் காட்சியும் அடக்கம் என்பதுதான் ஆச்சரியமான ஒரு விஷயம்.
ரவி தேஜா நடிக்கும் படங்களில் கிளாமரான ஹீரோயின்கள் வருவார்களே தவிர, முத்தக் காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளே இருக்கவே இருக்காது. அவருக்கு பெண் ரசிகைகளும், குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களும் அதிகம். ஆனால், 'பவர்' படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவீந்திரா கேட்டுக் கொண்டதற்கிணங்க ரவிதேஜா அந்த முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தாராம். படத்தில் உள்ள அந்தக் காட்சியைப் பற்றி இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கத்தான் அதை சொல்லாமல் விட்டார்களாம். ஒரு பாடல் காட்சியில்தான் அந்த முத்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறதாம். எந்த உறுத்தலும் இல்லாமல் மென்மையான விதத்தில்தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்டதாம்.
தமிழ்ப் பக்கம் வந்தாங்கன்னா இப்படி நடிப்பாங்களா ரெஜினா...?