ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாஜி ஹீரோயின் லட்சுமி. இந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்தவர். கடந்த சில வருடங்களாக சினிமாவில் அவர் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால் அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஓர்ம உண்டோ இ முகம் என்ற மலையாளப்படத்தில் நடிக்கிறார். இதில் வினித் ஹீரோவாகவும் நமீதா ப்ரமோத் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
இதுபற்றி லட்சுமி கூறும்போது: நான் சினிமாவைவிட்டு விலகி இருந்தாலும் சினிமாவில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். குறிப்பாக மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. தொழில்நுட்பம், கதை களம், புதியவர்களின் வருகை என மலையாள சினிமா பெரும் மாற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாற்றத்தில் என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் நடிக்கிறேன்.
இதில் நான் ஓரு ஜாலியான பாட்டியாக நடிக்கிறேன். கேரக்டர் எனக்கு பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னையிலிருந்து அடிக்கடி விமானத்தில் பறந்து சென்று நடிப்பது சிரமமாக இருந்தாலும் சினிமா என்னை இழுத்து அந்த சிரமத்தை மறக்கடித்துவிடுகிறது. என்கிறார் லட்சுமி.