Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதிஹாசனை சைவத்துக்கு மாற்றினார் கமல்!

30 ஆக, 2014 - 08:26 IST
எழுத்தின் அளவு:

நடிகர் கமல்ஹாசனின் குடும்பத்தில் யாரும் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆனால் கமல் அசைவத்தை விரும்பி ருசிப்பார். அதோடு பக்தியிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. அந்த வகையில் அசைவப்பிரியராக, நாத்திகவாதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கமல். மற்றபடி தனது விசயங்களை குடும்பத்தாரிடமும் திணிக்க மாட்டார்.

தனது மகள் ஸ்ருதிஹாசனை இசையமைப்பாளராக, உன்னைப்போல் ஒருவனில் இறக்கி விட்டார். ஆனால் அதையடுத்து அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் லக் என்ற இந்தி படத்தில் அவர் நாயகியாக அறிமுகமான போதுகூட கமல் அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை. தன் வழியில் மகளும் வருவது தப்பில்லை என்று அதை வரவேற்றார்.


ஆனால், மீன், இறா என அசைவ உணவுகளை டேஸ்ட் பார்ப்பதில் கில்லாடியான ஸ்ருதிஹாசன், எந்த கடற்கரை ஏரியாக்களுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போதும் ஸ்பெஷலாக ஆர்டர் பண்ணி ரசித்து, ருசித்து வந்தார். இந்த விசயம் கமல் காதுகளை எட்டியபோது, மகளை அழைத்து, மீன் உணவுகள் உடம்புக்கு நல்லதுதான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகும்போது சில கேடுகளையும் விளைவிக்கும் அதனால், சைவ உணவுகளே எப்போதுமே நல்லது என்று மகளுக்கு அறிவுரை வழங்கினாராம். இதையடுத்து அப்பாவின் அறிவுரையை ஏற்று தான் சைவத்துக்கு மாறி விட்டதாக டுவிட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.


அதைப்பார்த்து, அப்படியென்றால் ஏற்கனவே மீன்களை விதவிதமாக ருசித்து வந்த ருசிகண்ட பூனையான நீங்கள், இனிமேல் மீன் சாப்பிடும் ஆசை வந்தால் என்ன செய்வீர்கள் என்று ரசிகர்கள் அவரிடம் கேட்டதற்கு, மீன் ஆசை வந்தால் அவற்றை கனவில் ருசிப்பேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in