மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பாலிவுட்டில் ஷாருக்கான், ஜான் ஆப்ரகாம் போன்று கோலிவுட்டில் சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடிகர் ஸ்ரீயும் பெரிய திரைக்கு வர உள்ளார்.
சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள ஸ்ரீ, புகழ்பெற்ற இசை இரட்டையர்களான சங்கர்-கணேசில் கணேசின் மகனும், மறைந்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியின் பேரனும் ஆவார்.
தற்போது தான் நடித்து வரும் புதிய படம் பற்றிய கூறிய ஸ்ரீ, அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இந்த படத்தில் என்னை வித்தியாசமாக தோற்றத்தில் காட்டி உள்ளார். நடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் எனக்கு ரோல் மாடல். குணச்சித்திர வேடத்தில் அவரது இடத்தை நிரப்ப முடியாது. அது மிகப் பெரிய விஷயம். அதனை நான் நிச்சயம் அடைவேன் என்னும் ஸ்ரீயின் கண்களில் மிகப் பெரிய நம்பிக்கை தெரிகிறது.