ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கமாண்டோ ஹீரோ வித்யூத் ஜம்வால், அஞ்சான் பட புரொமோஷன் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றவர், அங்கேயே சில நாட்கள் தங்கி தன் நண்பர்களுடன் கும்மாளமிட்டார். சமீபத்தில் இந்தியா திரும்பியவர், தன் அடுத்தபடமான ''யாரா'' படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். திக்மான்சூ துலியா இயக்கும் யாரா படத்தில், இர்பான் கான், ஸ்ருதிஹாசன், வித்யூத், அமித் சாத் ஆகியோருடன் இயக்குநர் திக்மான்சூவும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் முசிறியில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் வித்யூத் உள்ளிட்ட படக்குழுவினர். வித்யூத் இந்தப்படத்திற்கு அவரே ஸ்டண்ட் அமைப்பதால் தனது குழுவினரோடு முறையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் ஸ்ருதிஹாசன் மற்றும் அமித் சாத் ஆகியோரும் பங்கேற்றனர். தான் எடுக்கும் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக படத்தில் நடிக்கும் அனைவருக்கும் முறையான பயிற்சி அளித்து ஒவ்வொரு காட்சிகளையும் படமாக்கி வருகிறார் இயக்குநர் திக்மான்சூ.