ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர தயாராகிக்கொண்டிருப்பதால் வசன காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஏற்கனவே துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து கூகுள் கூகுள் பாடலை பாடிய ஆண்ட்ரியாவை மீண்டும் அவருடன் ஒரு பாடலை பாட வைத்துள்ளார் அனிருத். செண்டிமென்ட்டுக்காக இதை செய்தாலும், இன்னொரு பாடலை ஸ்ருதிஹாசனுக்கு கொடுக்க திட்டமிட்ட அனிருத், அந்த டியூனை விஜய்யிடம் ஓ.கே செய்தபோதே, இந்த பாடலில் உங்களுடன் இணைந்து பாடப்போகிறார் ஸ்ருதிஹாசன் என்ற தகவலையும் சொல்லி விட்டாராம்.
இதையடுத்து, தெலுங்கு படப்பிடிப்புக்காக லண்டனில் முகாமிட்டிருந்த ஸ்ருதிஹாசனை தொடர்பு கொண்டு விசயத்தை கூறியிருக்கிறார் அனிருத். அதைக்கேட்டதும், எப்போது ரெக்கார்டிங் என்ற சொல்லுங்கள், நான் எங்கிருந்தாலும் சென்னைக்கு பறந்து வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம். அதனால் அந்த பாடலின் டியூனையும் அவர் பயிற்சி எடுப்பதற்காக முன்கூட்டியே அனுப்பி வைத்துவிட்டாராம் அனிருத்.
ஆக, சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு முன்பே கத்தியில் அவருடன் இணைகிறார் ஸ்ருதிஹாசன்.