ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலு என கடந்த காலங்களில் எத்தனையோ முன்னணி கதாநாயகிகள் காமெடியனுடன் ஆட்டம் போட்டிருக்கிறார்கள். சுந்தர்.சி இயக்கிய மேட்டுகுடி படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவுண்டமணி உடன் நடனம் ஆடி இருக்கிறார் நக்மா. அப்போது அவர்தான் தமிழில் நம்பர் ஒன் நடிகையாய் இருந்தார். கவுண்டமணி உடன் நக்மா நடனம் ஆடியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அன்று நக்மா செய்த புரட்சியை தற்போது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் செய்ய இருக்கிறார்.
முத்தையா இயக்கத்தில் தற்போது கொம்பன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதற்கு அடுத்து விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது விஷாலுடன் பூஜை படத்திலும், விஜய் உடன் சிம்பு தேவன் இயக்கும் படத்திலும் நடிக்கும் ஸ்ருதிஹாசன் இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க வடிவேலுவை அணுகினார்கள். கதையைக் கேட்ட வடிவேலு சம்பளம் பற்றி கூட அதிகம் பேசாமல் நடிக்க ப்புக்கொண்டுவிட்டார்.
என்னது...வடிவேலு சம்பளம் பற்றி பேசவில்லையா? காரணம் இருக்கிறது..! அந்தப்படத்தில் வடிவேலுவுக்கு ஸ்ருதிஹாசனை ஒரு தலையாய் காதலிக்கும் வேடம். அவரது ஒருதலை காதலில் கனவுப்பாடலும் உண்டாம். அந்தக் கனவுப்பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து டூயட் பாட இருக்கிறார் வடிவேலு. ஸ்ருதிஹாசனுக்கு கதை சொல்லும்போது வடிவேலு உடன் நடனமாட வேண்டும் என்ற விஷயத்தை தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் கோகுல். அதற்கு ஸ்ருதிஹாசனும் ஓகே சொல்லி விட்டாராம்.