மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தபோதும் தான் நடிக்கிற படங்களில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் வகையில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.முக்கியமாக டிடே இந்தி படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து மும்பையில் தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற தாய்குலங்கள் அனைவருமே ஸ்ருதிஹாசன் வந்த காட்சிகளின்போது கண்களை மூடிக்கொண்டார்களாம். அந்த அளவுக்கு ஆபாச புயலடித்திருந்தார் ஸ்ருதி.
அதனால் அவரைப்பொறுத்தவரை கவர்ச்சி, ஆபாசம் என்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்றாகி விட்டது. அப்படிப்பட்ட ஸ்ருதிஹாசன், தனது நடிப்பு மட்டுமின்றி, மற்ற நடிகைகள் யாராவது ஆபாசமாக நடித்திருந்தாலும் அதை அளவில்லாமல் புகழ்ந்து தள்ளுவதையும் வழக்கமாகக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவலான 'பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே' என்ற நாவலைத்தழுவி தற்போது ஹாலிவுட்டில் ஒரு காமசூத்ரா படம் தயாராகியுள்ளது. இதன் டிரைலர் சமீபத்தில் இணையதளங்களில் வெளியிட்டபோது உலக நாடுகளில் உள்ள ஏராளமான நடிகர்-நடிகைகள் அதற்கு லைக் செய்துள்ளனர்.
இந்த டிரைலரைப்பார்த்த ஸ்ருதிஹாசன், இந்தியில் வெளியான காமசூத்ராவை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை வியக்க வைத்துள்ளது. படத்தில் இருக்கும் ஒலி அமைப்பு, காட்சியமைப்பு எல்லாமே அமேஷிங்காக இருந்தது என்று தனது சார்பில் கருத்து பரிமாறியுள்ளார்.