Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூட்டை மாற்றுகிறார் சிவாஜி கேர்ள் ஸ்ரேயா!

28 ஜூலை, 2014 - 14:36 IST
எழுத்தின் அளவு:

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, மழை படத்தில் மழையில் குலுங்க குலுங்க நடனமாடியபடி தமிழக ரசிகர்களை அட்டாக் செய்தார். அதையடுத்து ரஜினி, விஜய், தனுஷ், ஆர்யா, ஜீவா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் வடிவேலுவுடன் இந்திரலோகததில் நா.அழகப்பன் படத்தில் குத்தாட்டம் ஆடியதையடுத்து ஸ்ரேயாவின் மார்க்கெட் அவுட்டானது. அதனால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் மறைந்த நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் நடித்த மனம் படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட்டானதால் இப்போது மேலும் சில தெலுங்குப்பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.


இதில் இந்தியில் வெளியான ஓ மைகாட் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறாராம். மனம் படத்திலேயே ஓரளவு மெச்சூரிட்டியான ரோலில் நடித்த ஸ்ரேயா, இந்த ரீமேக் படத்தில் வெங்கடேஷின் மனைவியாக நடிக்கிறாராம். இளம் வயது மனைவியான அந்த வேடத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான ஸ்ரேயாவாக அவரை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தியுள்ளதாம்.


அதனால், இதையடுத்து இனி இளவட்ட கதாநாயகியாக நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாக விடும் என்பதை புரிந்து கொண்ட ஸ்ரேயா, இனிமேல் நான் இந்த மாதிரியான மெச்சூரிட்டியான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதனால் இயக்குனர்கள் தயங்காமல் வித்தியாசமான குடும்ப வேடங்களுக்கு என்னை அணுகலாம் என்று அறிவித்திருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in