ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுடன் இருந்தபோது பழைய மாடல் ஓடன் கார் ஒன்றை வைத்திருந்தார். சித்தியிடமிருந்து பிரிந்த பிறகு அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. கம்பெனிகள் ஏற்பாடு செய்யும் கார்களையே பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் அஞ்சலி பி.எம்.டபிள்யூ எனப்படும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவருக்கு பிடித்த கருப்பு நிறத்திலேயே அதனை வாங்கியுள்ளார். "பி.எம்.டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது, இப்போது அது நிறைவேறியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.