ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஹாலிவுட் டைப்பிலான மியூசிக்கல் மூவி என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
அவர் மேலும் கூறியதாவது: பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் இருந்து விட்டால் அதனை இசை காவியம் என்பார்கள் அது தவறு. படத்தில் நடிப்பவர்களே பாடி, ஆடி நடிப்பதோடு இசை தொடர்புடைய படமாக இருந்தால்தான் அதனை மியூசிக்கல் மூவி என்று சொல்வார்கள். இந்த மாதிரி மியூசிக்கல் ஹாலிவுட்டில் அடிக்கடி வரும் தமிழில் இது முதல் முயற்சி.
கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளும் அது தொடர்பான போட்டிகள் வெற்றி தோல்விகள், நட்பு, காதல்தான் கதை. ஹீரோ ஹீரோயின் என்ற யாரும் கிடையாது நான்கு இசை குரூப்கள் அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள்தான் திரைக்கதை. படத்தில் மொத்தம் 19 பாடல்கள். நாட்டுப்புற பாடலில் இருந்து இந்துஸ்தானி, பாப், ஜாஸ் வரைக்கும் வெரைட்டியாக இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக உழைத்து இதற்கான ஸ்கிரிப்படையும், பாடல்களையும் உருவாக்கி இருக்கிறேன். எல்லா பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.