ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது திருமலை இயக்கி நடிக்கும் மலேசிய நண்பர்கள் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதற்கிடையில் நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் நண்பேன்டா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜெகதீஸ் கூறும்போது: "ஷெரின் திறமை மிக்க ஒரு நடிகை. நண்பேன்டா படத்தில் நான்கைந்து காட்சிகளில் நடித்தாலும் படத்திற்கு திருப்புமுனையான கேரக்டர். உதயநிதியை ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் கேரக்டர். அவரது கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும்" என்றார்.
நயன்தாரா, உதயநிதியின் காதலை பிரிக்க நினைக்கும் அழகு வில்லியாக ஷெரின் நடிப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.