ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் குறிப்பிடத்தக்கவர். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சுஷன்னே என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹிராக்கான், ஹரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஹிருத்திக், சுஷன்னே தம்பதிகளுக்கிடையே ஏற்பட்டு வந்த சின்னச்சின்ன வாக்குவாதங்கள் நாளடைவில் அவர்கள் பிரிந்து வாழும அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக ஹிருத்திக் ரோஷன்-சுஷன்னே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவருமே பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பிறகு அமைதி காத்த அவர்கள், நேற்று காலை மும்பையிலுள்ள பாந்த்ரா நீதிமன்றத்தில் தாங்கள் விவாகரத்து செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளனர். இருவரும் ஒரேவிதமான மனநிலையுடன் மனு தாக்கல் செய்திருப்பதால், அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து கிடைப்பதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.