ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாரதிராஜா இயக்கிய படம் அன்னக்கொடி. இந்த படத்தில் நாயகனாக அறிமுகமானவர் லக்ஷ்மண். அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தபோதும் படத்தின் தோல்வி காரணமாக அதன்பிறகு இவருக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில், பாண்டியநாடு படத்தையடுத்து சுசீந்திரன் இயக்கி வரும் ஜீவா படத்தில் அவர் கமிட்டாகியிருக்கிறார். இதே படத்தில் வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்து வருகின்றனர். அவர்களைத்தொடர்ந்து இன்னொரு ஜோடியாக லக்ஷ்மணும், சானியாவும் நடிக்கிறார்கள்.
அப்படத்தில் இவர்கள் வருகிற நேரம் குறைவாக இருந்தபோதும், கதைக்கு வலு சேர்க்கிற முக்கியமான காட்சிகளில் நடிக்கிறார்களாம். அதனால், பாரதிராஜா படம் தன்னை ஏமாற்றியபோதும், சுசீந்திரனின் இந்த ஜீவா படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்ற புதிய நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் லக்ஷ்மண்.