ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசை அமைப்பாளர் யுவனைத் தொடர்ந்து நடிகர் ஜெய்யும் மதம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் நடித்தபோது அவர்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் பிடித்ததால் அதற்கு மாறியதாக கூறப்படுகிறது. அவர் வேறு மதத்தை சேர்ந்த நடிகை ஒருவரை காதலித்ததாவும் அவருக்காக மதம் மாறியதாகவும் கூறுகிறார்கள். (திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் கதையும் கிட்டத்தட்ட இப்படித்தான்). காதல் தோற்று விட்டாலும் அவர்களின் மதம் பிடித்துவிட்டதால் தொடர்ந்து அதை பின்பற்றி வருவதாக கூறுகிறார்கள். இவை எல்லாமே ஜெய்யின் நண்பர்கள், மற்றும் அவர் நடிக்கும் பட யூனிட் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள்தான். இதனை ஜெய் மறுக்கவும் இல்லை. ஒத்துக் கொள்ளவும் இல்லை.