Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ஊர்வசி திடீர் மறுமணம் : கட்டிட தொழில் அதிபரை மணந்தார்

01 ஏப், 2014 - 12:03 IST
எழுத்தின் அளவு:

1983ம் ஆண்டு முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஊர்வசி. ஒரு முருங்கைக்காய் சமாச்சாரம் மூலம் சினிமாவின் உயரத்தை தொட்டவர். தனது தனித்துவமான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். 2000மாவது ஆண்டில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார்.


சில ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்த ஊர்வசியும், மனோஜ் கே.ஜெயனும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தனர். மனோஜ் கேரளாவில் உள்ள அவரது சொந்த வீட்டிலும், ஊர்வசி சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டிலும் வசித்து வந்தனர். திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தனர். விவாகரத்து கிடைத்ததும் குழுந்தை யாருக்கு என்ற வழக்கு சில வருடங்கள் நடந்தது. அதில் தேஜலட்சுமி தன் தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.


சென்னையில் தனித்து வாழ்ந்து வந்த ஊர்வசிக்கு துணையாக வந்து சேர்ந்தார் கட்டிட தொழில் அதிபரும், சிவில் என்ஜினீயருமான சிவபிரசாத். ஊர்வசியின் தம்பியின் நண்பர். ஊர்வசிக்கு ஆறுதலாக இருந்தவர் பின்னர் அவரது மனதிலும் இடம் பிடித்தார். இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர். இப்போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டாதாக கூறப்படுகிறது. 6 மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாகவும் இப்போதுதான் அது வெளியில் கசிந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே.ஜெயன் ஆஷா என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து அதே மாதத்தில் ஊர்வசி சிவபிரசாத்தை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in