ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன் அதன்பிறகு நிறைய தமிழ்ப்படங்களில நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் அதிகமாக நடித்த ஸ்ருதி, கிட்டத்தட்ட தமிழை மறந்தே விட்டார். அவரைத்தேடிச்சென்ற பல படங்களை திருப்பி விட்டு வந்தார். இதனால் அவர் தமிழில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியது. இந்தநிலையில், தற்போது ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்கும் பூஜை படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்திலும் ஏழாம் அறிவு படம் போலவே வலுவான வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், இதையடுத்தும் தமிழில் எனக்கு வெயிட்டான கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் சில இயக்குனர்களிடம் கூறியிருக்கிறார் ஸ்ருதி. அதனால் அடுத்தடுத்து அவரை தமிழ் படங்களில நடிக்க வைக்க சில டைரக்டர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில, நான் தமிழ்ப்படங்களை தவிர்ப்பதாக வெளியான செய்தி தவறானது. சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது கால்சீட் இல்லை. அதனால் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினேன். ஆனால் அதை வைத்தே நான் தமிழில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்று செய்தி பரவியது. ஆனால், இந்திக்கு நிகராக தமிழிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.