ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செல்வராகவன் பற்றி கேள்வி கேட்டால் சாந்தமாக பதில் சொல்லும் ஆண்ட்ரியா, உங்களுக்கும், செல்வாவுக்கும் லவ்வாமே என்று கேட்டால் மட்டும் பத்ரகாளி ஆகி விடுகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இதுவரைக்கும் ஒரு படத்துக்காக 2 வருஷம் கஷ்டப்பட்டதே கிடையாது. காத்திருந்ததும் கிடையாது. இந்த 2 வருஷத்துல சில படங்களின் வாய்ப்புகள் கை நழுவிப்போயின. அதனால் நான் கொஞ்சமும் வருத்தப்பட்டதில்லை. இவ்வளவு பெரிய புராஜெக்ட்டை செல்வா இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது. விறுவிறுப்பாக நடந்த சூட்டிங்கில் சில இடைஞ்சல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சீக்கிரம் முடித்திருப்பார் என்று கூறியிருக்கிறார். செல்வாவுடன் காதல் என்ற கிசுகிசு பற்றி ஆண்ட்ரியாவிடம் கேட்டால், செல்வா சிறந்த இயக்குனர். அவர் எனக்கு முக்கியமான நண்பர். அவ்வளவுதான், என்று கோபத்துடன் பதில் சொல்கிறார்.