ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாகை சூடவா படத்தில் அறிமுகமானவர் ஜிப்ரான். வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி படங்களுக்கு இசை அமைத்தார். தற்போது கமலின் விஸ்வரூபம் 2 படத்துக்கு பின்னணி இசை அமைத்து வருகிறார். திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கும் இசை அமைத்து வருகிறார்.
இதற்கிடையில் விமல், லட்சுமிமேனன் நடிக்கும் மஞ்சப்பை படத்திற்கு இசை அமைக்க ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். படத்தின் இயக்குனர் ராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி விட்டதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம் 2 படத்தில் கவனம் செலுத்தும் ஜிப்ரான் மஞ்சப்பை பாடல்களை தாமதமாக்கியதால் அவரை நீக்கியதாகவும் சொல்கிறார்கள்.
இதுபற்றி ஜிப்ரான் தனது பேஸ்புக்கில் "நேரமின்மை காரணமாகவே மஞ்சப்பை படத்தில் பணியாற்ற முடியவில்லை. மன வருத்தத்துடன் வெளியேறிவிட்டேன்" என்று குறிப்பிட்டிருகிறார்.