ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் துரை பாண்டியனின் மகள் சுந்தரி. இவர் பேஷன் டிசைனிங் படித்து விட்டு ஷிவானி படத்தின் மூலம் சினிமாவிற்கு காஷ்ட்யூம் டிசைனராக வந்தார். அதன் பிறகு நடிகையாகிவிட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் ஓம் சாந்தி ஓம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது நகுல் நடிக்க இருக்கும் எண் ஒன்றை அழுத்தவும் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
"முதலில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தது. நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தேன். இப்போது அடுத்து படமும் வந்து விட்டது. இரண்டிலுமே காமெடி கலந்த கேரக்டர். தொடர்ந்து காமெடியாக நடித்து காமெடி நடிகையாகும் எண்ணம் இல்லை. ஹீரோயினாக நடிக்க நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து காஸ்ட்யூம் டிசைனிங்கும் செய்வேன்" என்கிறார் சுந்தரி.