விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும், பிபாஷாவும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள்தான் உண்மையான காதலர்கள் என்று பாலிவுட் அவர்களை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதல்"னு இந்தி மீடியாக்கள் புலம்பித் தீர்த்தது.
இப்போது இந்த காதலின் கிளைமாக்ஸ் ஆரம்பம். கடந்த புத்தாண்டு தினத்தன்று ஆபிரகாம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஜ்சல்சில் தனது புதுகாதலியான பிரியா ரஞ்சாலை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதைக் கேள்விப்பட்டு கொதித்துப்போன பிபாஷா இப்போது தனது புது காதலன் ஹர்மான் பவேஜாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆபிராகாமுடன் காதல் கசந்த பிறகு ஆறுதல் மருந்தாக வந்தவர்தான் ஹர்மான். ஆறுதல் காதலாகி மாறி கசிந்துருகி விட்டது. மெதுவாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தார் பிபாஷா. ஆனால் ஆபிரகாம் திருமணம் செய்து கொண்டதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹர்மானை திருமணம் செய்து கொள்ள முடிவுவெடுத்துவிட்டார். ஹர்மான் தற்போது திஸ்கியான் என்ற படத்தில் நடித்து வருகிறார் அது முடிந்ததும் திருமணம் நடக்க இருக்கிறது.