பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாஷா பாசு. மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், ஜனவரி 7ம் தேதி, 1979ம் ஆண்டு பிறந்தவர். மாடலிங் துறையில் இருந்த பிபாஷா பாசு, 2001ம் ஆண்டு அஜ்னாபி என்ற த்ரில்லர் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். பின்னர் ராஸ் என்ற த்ரில்லர் படத்தின் மூலம் பிரபலமானவர் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இந்தி மட்டுமல்லாது, தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் படங்களுக்கு பெயர் போனவர் நடிகை பிபாஷா பாசு.