விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி | பெண் வேடத்தில் அசார் | இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் : சுசித்ரா திடீர் முடிவு | 'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் |
டிக் டாக் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக நடித்து வரும் அவர் சுந்தரி தொடரின் மூலம் தமிழக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறார். முன்னதாக தியேட்டர் பேக்டரி என்ற நாடகக்குழுவை உருவாக்கியிருந்தார். தற்போது இந்த தியேட்டர் பேக்டரியை நடிப்பு கற்றுக் கொடுக்கும் பள்ளியாக மாற்றியிருக்கிறார். மே தினத்தன்று பள்ளியை திறந்து வைத்த அவர் அங்கு மாணவர்களுக்கு ஆசிரியராக மாறி வகுப்பெடுத்திருக்கிறார். கேப்ரில்லாவின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.