கவின், நயன்தாரா இணையும் புதிய படம் | வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் | சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா | என் விருதுகள் சில என்னிடம் வரவேயில்லை : ஏஆர் ரஹ்மான் அதிர்ச்சித் தகவல் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த குருவாயூர் அம்பலநடையில் | பெண் குழந்தைக்கு தாயான யாமி கவுதம் : குழந்தையின் பெயரையும் வெளியிட்டார் | நான்கே மாதத்தில் 1000 கோடி வசூல் : மலைக்க வைக்கும் மல்லுவுட் | பிரேம் நசீர் சாதனையை முறியடிங்கள் : மோகன்லாலுக்கு கமல் வாழ்த்து | சீரியலை விட்டு விலகிய வீஜே விஷால் - காரணம் இதுதானா? | ஜெய் ஆகாஷ் உடன் ஜோடி சேரும் ரேஷ்மா |
நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு என்பதை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார். படத் தயாரிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதுதவிர கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.