பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'பேமிலி ஸ்டார்' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, படம் குறித்து பல நெகட்டிவ்வான கருத்துக்களை வேண்டுமென்றே சிலர் பதிவிடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மேனேஜர் அனுராக் பர்வதனேனி, விஜய் தேவரகொண்டா ரசிகர் மன்றத் தலைவர் நிஷாந்த்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சில குரூப்கள், சில கணக்குகள் ஆகியவற்றின் ஸ்கிரீன் ஷாட் உடன் அந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளார். “சில நெகட்டிவ்வான விமர்சனங்களால்தான் ஒரு தரப்பு ரசிகர்கள் படத்திற்கு வரவில்லை. அந்த நெகட்டிவ் விமர்சனங்கள், அந்த முட்டாள்தனமான விமர்சனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேரளாவில் படம் வெளியான மூன்று நாட்கள் வரை விமர்சனங்கள் போடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது போல இங்கும் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் திரையுலகம் வாழ முடியாது,” எனக் கூறியுள்ளார்.
தில் ராஜுவின் இந்தக் கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.