இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் மற்றும் என்னும் எப்பொழும் உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தவர் வினோத். இவர் மம்முட்டி நடித்த கேங்ஸ்டர் படத்திலும் அவருடன் கூடவே வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் தென்னிந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதனை அதிகாரியாகவும் அரசு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்ற ரயிலில் பணியில் இருந்த வினோத், ஒடிசாவை சேர்ந்த டிக்கட் இல்லாமல் பயணித்த ஒரு பயணியை அடுத்த ஸ்டேஷனில் இறங்குமாறு கண்டித்துள்ளார்.
மது போதையில் இருந்த அந்த பயணி இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஓடும் ரயிலில் இருந்து திடீரென வினோத்தை தள்ளிவிட்டார். இதில் மரணம் அடைந்த வினோத்தின் உடல் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு ஆற்றுப் பாலத்தின் கீழே கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மலையாள திரையுலகில் வினோத்துடன் நன்கு பழகிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது அதிர்ச்சி கலந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.