நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், உங்களோட யூகங்களை தாண்டி வேறு மாதிரியான கதையில் இந்த படம் உருவாகிறது. ரஜினியை புதிய பரிமாணத்தில் காண்பிக்க போறேன் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் தற்போது 171வது படத்தில் ரஜினிகாந்த் தங்க கடத்தல் மன்னனாக ஒரு நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ரஜினி நெகட்டிவ் வேடத்தில் நடித்த படங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று லோகேஷ் கூறியிருந்த நிலையில், தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதோடு இந்த படத்திலும் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் போன்ற கேரக்டர் இடம் பெறுவதாகவும், ஒரு முன்னணி ஹீரோ அந்த வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.