500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகை சோனு கவுடா. சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதோடு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பாலோயர்களை வைத்திருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் எட்டு வயது சிறுமியை தத்தெடுத்திருப்பதாக அறிவித்த சோனு கவுடா அந்த சிறுமியுடன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அவர் சட்டவிரோதமாக அந்த சிறுமியை தத்தெடுத்திருப்பதாக கர்நாடக மாநில குழந்தைகள் நலத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமியை பெற்றோரிடம் இருந்து பணம் கொடுத்து அவர் வாங்கி இருப்பதாகவும் பள்ளிக்கு செல்லும் வயதில் அவரை வீட்டு வேலை செய்ய பயன்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனு கவுடாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சோனு கவுடாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் சோனு அடைக்கப்பட்டார். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.