Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பங்கேற்பு!

16 ஏப், 2013 - 10:22 IST
எழுத்தின் அளவு:

 

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு  ரஜினிகாந்த்தும், ஐஸ்வர்யா ராய்யும் கலந்து பங்கேற்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன், இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. வழக்கமாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள்தான் இந்த விழாவில் பெருமளவு கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு, கேன்ஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக மே மாதம் அவர் பிரான்ஸ் செல்கிறார். அவர் இரு வேடங்களில் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘கோச்சடையான் படத்தின் டிரெய்லர் இதில் வெளியிடப்படுகிறது. கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்துள்ளார். இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார். அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘தி கிரேட் கேட்ஸ்பி என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படுவதால், சிறப்பு அழைப்பாளராக அவர் கேன்ஸ் செல்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்கிறார்.இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகை ஐஸ்வர்யா ராயை பிரெஞ்ச் அரசு சார்பில் அழைத்துள்ளனர். சென்ற வருடம், அவருடைய பிறந்த நாளின்போது, பிரான்ஸ் நாட்டு அரசு அவருக்கு தங்கள் நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதினை அளித்து கவுரவித்தது நினைவிருக்கலாம். கேன்ஸ் விழாக்களில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். இதுகுறித்து பிரெஞ்ச் தூதர் பிரான்க்காய்ஸ் ரிச்சியர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதன் மூலம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டார். வரும் திரைப்பட விழாவில், இந்திய சினிமா குறித்து அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்திய திரை உலகின் முக்கிய பிரமுகர்களை இந்த விழாவுக்கு அழைக்கப் போகிறோம். ஐஸ்வர்யா ராயும் சிறப்பு அழைப்பினைப் பெறுவார்," என்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு வைத்துதான் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுகிறார். அடுத்து பாலிவுட் சாதனை நடிகர் அமிதாப் பச்சன் தனது முதல் ஹாலிவுட் படத்துக்காக கேன்ஸ் விழாவுக்கு செல்கிறார். எனவே இந்த ஆண்டு கேன்ஸ் விழா, இந்திய திரைப்பட திருவிழாவாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
என் வழியில் யாரும் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன் : நடிகை அஞ்சலி அதிரடி முடிவுஎன் வழியில் யாரும் குறுக்கிட ... ரசிகர்களுக்கு அஜீத்தின் வேண்டுகோள்! ரசிகர்களுக்கு அஜீத்தின் ...


வாசகர் கருத்து (7)

sakthivel, dubai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஏப், 2013 - 18:53 Report Abuse
sakthivel, dubai அப்ப இன்னும் கொஞ்ச நாள்ல குட்டி ராணா வருவாரு
Rate this:
Kamal - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17 ஏப், 2013 - 08:38 Report Abuse
Kamal Superstar rocks...
Rate this:
Thenmozhi - Burtinia,புர்கினா பேசோ
16 ஏப், 2013 - 20:37 Report Abuse
Thenmozhi இந்த கிழவனுக்கு இந்த வயசில் வந்த ஆசையை பாரு? எல்லாம் மகளின் படம் ஊத்திகிட கூடாது என்ற publicity தான். சரியான பிசினஸ் காரன் இவன். மறுபிழைப்பு எடுத்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை தமிழக மக்களுக்காக ஒன்றுமே பண்ண வில்லை இந்த கிழவன். மக்கள் இனியும் இவனுக்கு கட் அவுட் வைப்பது என்று காமெடி பண்ணாமல் ஆற்றல் மிக்க இளைய நடிகர்களை (உதாரணம்: விஜய சேதுபதி, விமல், விக்ரம் பிரபு,) ஊக்குவிக்க வேண்டும். இவனை விட்டால் தன் வயதில் ஐந்தில் ஒரு பகுதி வயது உடைய லக்ஷ்மி மேனன், துளசி என்று ஜோடி கேட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. கலி காலம்
Rate this:
Balraj - tirupur,இந்தியா
16 ஏப், 2013 - 20:14 Report Abuse
Balraj ரஜினி இஸ் கிரேட்
Rate this:
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
16 ஏப், 2013 - 18:40 Report Abuse
bala nalla vishayam, cinema fieldlayathu openah indiava varvekkuranga, ippdiyae yella thuraiyum munneruna nammala adichika mudiyathu........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
  Tamil New Film Narai
  • நரை
  • இயக்குனர் :விவி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in