நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகையான நித்யா மேனன். தமிழில் ‛காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவரின் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி, இயக்குகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ரொமான்ஸ் காமெடி கலந்த பேண்டஸி கதையம்சம் நிறைந்த படமாக உருவாகிறது. இதில் கதையின் நாயகர்களாக வினய் ராய், நவ்தீப் நடிக்க, நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பணிகளை பிரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.