இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

மலையாள திரைகளில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் ரஞ்சனி ஜோஸ். பல இசையமைப்பாளர்களின் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள இவர், சில தனி இசை ஆல்பங்களில் ஒரு நடிகையாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நேர்காணல் தொகுப்பாளராக மாறி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்துள்ளார் ரஞ்சனி ஜோஸ்.
பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சமீபத்தில் கொச்சிக்கு வருகை தந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதில் ஒரு பகுதியாக அவரை ஒரு மணி நேரம் பேட்டி எடுக்கும் வாய்ப்பு பாடகி ரஞ்சனி ஜோஸுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலாவது பாடி விட வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் பின்னணி பாடகிகளில் ரஞ்சனி ஜோஸும் ஒருவர்தான். ஆனாலும் இப்படி அவருடன் ஒரு மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்து உரையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது அவரது இசையில் பாட வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்குமோ அதற்கு சமமான உணர்வாக இருந்தது. இதுவும் கனவு நனவாண தருணம் தான்” என்று கூறியுள்ளார் ரஞ்சனி ஜோஸ்.
இந்த நிகழ்ச்சியில் தான் கேட்ட கேள்விகளுக்கு ஏ.ஆர் ரஹ்மான் நிதானமாகவும் பொறுமையாகவும் அதேசமயம் விளக்கமாகவும் பதில் அளித்தது தன்னை ஆச்சரியப்படுத்தியது என்று கூறியுள்ள ரஞ்சனி ஜோஸ், தான் இந்த நிகழ்ச்சிக்காக திடீர் தொகுப்பாளராக மாறியதால் கேள்விகளை கொஞ்சம் கவனத்துடன் தான் கேட்டேன் என்றும் கூறியுள்ளார்.