ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சின்னத்திரை நடிகையான தீபா, சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த சாய் கணேஷ்பாபு என்பவரை காதலித்து வந்தார். தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் மகன் இருப்பதால் சாய் கணேஷ்பாபு வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சாய் கணேஷ்பாபு தற்போது தீபாவுடன் வாழாமல் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தீபா போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் சாய் கணேஷ்பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபா தனது இரண்டாவது திருமணத்திலும் ஏமாந்துவிட்டாரே! என ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.