ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் அஜித்திற்கு மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித், 52. இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காதுக்கு அருகே மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய வீக்கம் கண்டறியப்பட்டது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு ஒருநாள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அஜித் இன்று(மார்ச் 9) அதிகாலை வீடு திரும்பினார்.
அறுவை சிகிச்சைக்கு பின், நடிகர் அஜித் நலமுடன் இருப்பதாகவும் வரும் 15ம் தேதி, 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக, 'அஜர்பைஜான்' நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.