500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
'சேத்துமான்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தமிழ். தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'எலெக்ஷன்'. உறியடி விஜயகுமார் நாயகனாகவும், அயோத்தி படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ராணி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். “இந்த படம் உள்ளாட்சி தேர்தல் அரசியலை உள்ளது உள்ளபடி சொல்லும் படம் என்கிறார் இயக்குனர் தமிழ்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து ஏராமான படங்கள் வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான படங்கள் உள்ளாட்சி தேர்தலை காமெடியாகத்தான் சொல்லி இருக்கிறது. இந்த படத்தில் அதை சீரியசாக சொல்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடக்கும், அதுக்கான அமைப்பு எப்படி உருவாகிறது, வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும், ஓட்டு கேட்க செல்வது எப்படி என்பதை யதார்த்தாமாக காட்டுகிறேன்.
ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல், கட்சி பலம், மத பலம், சாதி பலம் இருக்கும். அதே நேரத்தில் நல்லவராகவும் இருக்க வேண்டும். மற்ற தேர்தல்களைவிட உள்ளாட்சித் தேர்தலில்தான் பகையும், பழிவாங்கலும், குரோதமும் நிறைந்திருக்கும். உள்ளாட்சி தேர்தலில்தான் அதிக கொலையும் நடக்கும். இவைகளை உள்ளது உள்ளபடி சொல்கிறேன்.
படித்து விட்டு வேலைக்கு போகிற நடுத்தர குடும்பத்து இளைஞன் நடராசன் என்ற கேரக்டரில் விஜயகுமார் நடித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் நாமும் மக்கள் பணி செய்வோமோ என்று அவரும் களத்தில் இறங்குகிறார். அவர் சந்திக்கிற பிரச்னைகள்தான் படம். வேலூர் ஆம்பூர் பகுதிதான் கதை களம். என்கிறார்.