புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு |
கடந்த 2022-ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தை விபின் தாஸ் என்பவர் இயக்கி இருந்தார். கேரளாவை தாண்டி தமிழகத்திலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது பிரித்விராஜ் வில்லனாக நடித்து வரும் குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்தவரும், மின்னல் முரளி பட இயக்குனருமான பஷில் ஜோசப் தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் விபின் தாஸ். இந்த படம் வரும் ஜூலையில் துவங்க இருக்கிறது. பிரபலமான பாதுஷா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.