Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க வசூலில் சாதனை படைக்கும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'

04 மார், 2024 - 05:59 IST
எழுத்தின் அளவு:
Manjummel-Boys-sets-record-in-US-collections

மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கேரளாவை விடவும் தமிழகத்தில் அதிக வசூலைக் குவிக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் சொல்லி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவிலும் இப்படம் மலையாளப் படங்களின் வரலாற்றில் புதிய வசூல் சாதனையை அங்கு படைக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தின் வசூலைக் கடந்து தற்போது 7 லட்சம் யுஎஸ் டாலர் வசூலை நெருங்கியுள்ளதாம். வரும் வாரத்தில் 10 லட்சம் யுஎஸ் டாலர் வசூலைப் பெறும் என்கிறார்கள். அப்படி கடந்தால் மலையாளப் படம் ஒன்று அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் 1 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்த முதல் படம் என்ற பெருமையைப் பெறும்.

தமிழகத்தைப் போலவே தமிழ் சினிமா ரசிகர்களும் அமெரிக்காவில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தைப் பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதே அதற்குக் காரணமாம். உலக அளவில் விரைவில் 100 கோடி வசூலைக் கடக்க உள்ள இப்படத்தின் பட்ஜெட் 15 கோடி மட்டுமே என்று தகவல்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஆர்வி உதயகுமார் தேர்வு ?தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் ... இறுதிக்கட்டத்தை நோக்கி 'கோட்' - அப்டேட் தந்த வெங்கட் பிரபு இறுதிக்கட்டத்தை நோக்கி 'கோட்' - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

INNER VOICE - MUMBAI,இந்தியா
10 மார், 2024 - 08:03 Report Abuse
INNER VOICE மக்களின் ரசனை எப்படி என்றே தெரியவில்லை. ஒரு மொக்கை படத்துக்கு இவ்வளவு வசூலா? படம் முழுவத்தும் சத்தமோ சத்தம். காது செவிடாகி விட்டது.படத்தின் பெயரை குகை என்று வைத்திருக்கலாம். வாயில் நுழையாத பேர் வேறு. சினிமா தியேட்டறில் பார்த்ததுக்கு மனம் வருந்துகிறேன். நேரம், பணம் விரயம். பாவம் ரசிகர்கள். பெரிய நடிகர்களின் பெயரை குறிப்பிட்டதுக்கு என்ன கரணம் தெரியவில்லை, அவர்களின் பங்கு ஸிரோ.
Rate this:
KayD - Mississauga,கனடா
04 மார், 2024 - 11:03 Report Abuse
KayD நம்ப ஊரில் நூறு கோடி செல்வு பண்ணி பதினைந்து கோடி கூட வசூல் பண்ணாம வெற்றிவிழா தியேட்டர் மூடு விழா னு கொண்டடடும் இடத்தில மல்லு பாய்ஸ் துட்ட அல்லு பாய்ஸ் தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in