நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள சினிமாவில் ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறார் மம்முட்டி. அவர் நடித்து வெளியான 'கன்னூர் ஸ்குவாட்' படம் 25 கோடியில் தயாராகி 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல அடுத்து வெளியான 'காதல் தி ஸ்கோர்' படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலையும் குவித்தது. இதில் மம்முட்டி மனைவியாக ஜோதிகா நடித்திருந்தார். தற்போது வெளியாகி உள்ள 'பிரம்மயுகம்' படமும் வசூலை குவித்து வருகிறது. 50 கோடியை தாண்டி வசூலித்து தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கன்னூர் ஸ்குவாட், காதல் தி ஸ்கோர் படங்களின் வெற்றி விழா கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் மம்முட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மனைவி சுல்பத் குட்டி, மகள் சுருமி, மருமகள் அமால் சல்மான் கலந்து கொண்டனர். மகன் துல்கர் சல்மான் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை, அதேபோன்று ஜோதிகாக உள்ளிட்ட இரு படத்தில் பணியாற்றிய கலைஞர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மம்முட்டி பரிசுகளை வழங்கினார். இந்த விழா மம்முட்டியின் சொந்த செலவில் நடந்ததாக கூறப்படுகிறது.
==============