Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரிண்ட் மூலம் மீண்டும் திரையிடல் : ரசிகர்கள் வரவேற்பு

26 பிப், 2024 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Re-screening-by-Print-:-Fans-welcome

ரீ-ரிலீஸ் கலாச்சாரம் மீண்டும் தமிழ் சினிமாவில் எட்டிப் பார்த்துள்ளது. டிஜிட்டல் திரையிடல் வருவதற்கு முன்பாக ரீ-ரிலீஸ் என்பது ஒரு பெரிய மார்க்கெட்டாக இருந்தது.

முக்கிய நகரங்களில் ஓடி முடித்த படங்களின் பிரிண்ட்களை வைத்து, அடுத்து சிறிய நகரங்களில், பின்னர் சிறிய ஊர்களில் அப்படங்களைத் திரையிடுவார்கள். அது போல பல பழைய சூப்பர் ஹிட் படங்களையும் டூரிங் டாக்கீஸ் எனப்படும் டென்ட் கொட்டா தியேட்டர்களிலும் திரையிட்ட காலம் ஒன்று இருந்தது.

டிஜிட்டல் வந்த பிறகு அந்த பழைய படங்களின் ரீ-ரிலீஸ் என்பது காணாமல் போனது. தற்போது அதை மீட்டெடுத்து வந்துள்ளார்கள். கடந்த சில வருடங்களில் சில முக்கிய படங்களை மட்டுமே டிஜிட்டலுக்கு மாற்றி, அவற்றின் ஆடியோ தரத்தையும் உயர்த்தி வெளியிட்டார்கள். அது போல பல படங்களை டிஜிட்டலுக்கு மாற்றித் திரையிட யாரும் தயாராக இல்லை.



இந்நிலையில் 90களில் வந்த சில படங்களை இன்றைய 2 கே கிட்ஸ்களும் ரசிக்கும் விதத்தில் மீண்டும் பிரிண்ட் மூலம் திரையிடுவதை சென்னையில் உள்ள கமலா தியேட்டர் ஆரம்பித்துள்ளது. பிப்ரவரி 23ம் தேதி விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' அஜித் நடித்த 'வாலி' படங்களை பிரிண்ட் மூலம் ரீ-ரிலீஸ் செய்தார்கள்.

அன்றைய தினம் வெளிவந்த புதிய படங்களுக்கு 20 பேர் மட்டுமே வந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ஏறக்குறைய ஹவுஸ் புல்லாகி ஓடியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகவும் இதே நிலைதான் இருந்துள்ளது. இவற்றிற்கான கட்டணம் வெறும் ரூ.69 என்பதும் வரவேற்புக்கு ஒரு காரணம்.

புதிய படங்களைக் காட்டிலும் பழைய படங்களுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பது மற்ற தியேட்டர்காரர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதல் இந்திய ஒளிப்பதிவாளர் : சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருதுமுதல் இந்திய ஒளிப்பதிவாளர் : சந்தோஷ் ... இரண்டு இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரும் சிவகார்த்திகேயன்? இரண்டு இயக்குனர்களுக்கு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

26 பிப், 2024 - 04:02 Report Abuse
ஆரூர் ரங் பிரிண்ட் ஒளிபரப்பில் உள்ள ஷைன்/ ஃபினிஷ் டிஜிட்டலில் வராது. அந்த அனுபவமே தனி. ஆனால் பிரிண்ட்டின் வாழ்நாள் குறைவு. நாளடைவில் வெளுத்துப் போய்விடும் . மேலும் நெகடிவவை வெகுநாட்கள் குறைந்த வெப்பத்தில் பாதுகாப்பது கடினம். கர்ணன் படத்தை சீர்திருத்தி டிஜிட்டலில் வெளியிட கடும் முயற்சி தேவைப்பட்டது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in