அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
2024ம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 23ம் தேதி 8 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன. கடந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி 8 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 படங்கள் மட்டும்தான் வெளியாகின.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 8 படங்களில் எத்தனை படங்கள் சரியாக வெளியாகும் என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
“பைரி, பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம், வித்தைக்காரன்” ஆகிய படங்கள் பிப்ரவரி 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள். அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இந்த 8 படங்களில் எந்தப் படம் ரசிகர்களை எட்டப் போகிறது என்பது படம் வெளிவந்த பிறகே தெரியும்.
பிப்ரவரி மாத வெளியீடுகள் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அடுத்த மாதம் முழு ஆண்டுத் தேர்வு மாதம் என்பதால் அதிகப் படங்களை எதிர்பார்க்க முடியாது. தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகுதான் டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.