நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சிவராஜ் குமார். சமீபகாலமாக இவர் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் தனது மார்கெட் விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இவரது பார்வை தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியுள்ளது.
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்போது சிவராஜ் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.