சரோஜினி நாயுடுவாக நடிக்கும் மலிஷ்கா | ரீ-ரிலீஸில் 25 நாளைக் கடந்த 'கில்லி' | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு ஆச்சரியங்கள் | அமெரிக்க தமிழர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக் : நம்பியார் ஜோடியாக அறிமுகமான பாக்கியம் | நான் ஓரினச்சேர்க்கையாளரா... : சுசித்ரா குற்றச்சாட்டுக்கு மாஜி கணவர் கார்த்திக் பதில் | இயக்குனரின் கெட்ட பெயர் தான் ஓடிடி ரிலீஸை தடுக்கிறது : டொவினோ தாமஸ் பதிலடி | சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் பரிசீலனை செய்ய தயார் : பிஸ்னாய் சமூகம் அறிவிப்பு | கமல் பட வாய்ப்பை மறுத்தாரா பிரேமலு பட இயக்குனர்? | இன்ஸ்பெக்டர் ரிஷியை பாராட்டிய ரஜினி : ஜே.எஸ் நந்தினி நெகிழ்ச்சி |
ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அதோ முகம்'. கதையின் நாயகனாக புதுமுகம் சித்தார்த். கதையின் நாயகியாக புதுமுகம் சைதன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண் பாண்டியன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய, சரண் ராகவன் இசை அமைக்கிறார்.
சுனில் தேவ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “அதோ முகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை சொல்லும் படம். ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ், திரில்லராக படம் உருவாகியுள்ளது. ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை” என்றார்.