ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா. அவர் விஜய்யின் 69வது படத்தைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாகவும், அதனால் விஜய் நடிப்பது உறுதி என்றும் டோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. மிகப் பிரம்மாண்டமான படமாக அப்படம் உருவாக உள்ளதாகவும், படத்தின் இயக்குனர் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் 69 படத்தின் வேலைகள் ஆரம்பமாகலாம். இதனிடையே, விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு வருடங்களில் அவர் நடிப்பதை விட்டும் விலகுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.