நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'அப்டேட்ஸ்' என்ற வார்த்தையை அதிகமாகப் பிரபலபடுத்தியவர்கள் அஜித் ரசிகர்கள். அவர் நடித்து வரும் படங்களுக்கு அப்படியான அப்டேட்டுகள் வரவே வராது. அதனால், கிரிக்கெட் மைதானம், பிரதமர் வருகையின் போது என 'அப்டேட்ஸ்' கேட்டு விமர்சனங்களுக்கும், கிண்டல்களுக்கும் ஆளானார்கள்.
தற்போது 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட் ஒன்றை அஜித்தின் பிஆர்ஓவும், படத்தின் பிஆர்ஓவுமான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். “அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதிய இடத்தில்... இன்னும் சில நாட்களில்…,” என அஜித்தின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், இரண்டு புகைப்படங்களையும் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். ஒரே சமயத்தில் இத்தனை அஜித் புகைப்படங்கள் வந்தது, படத்தின் அப்டேட் கிடைத்தது என அஜித் ரசிகர்கள் 'ஹேப்பி' ஆக உள்ளார்கள்.
பொதுவாக அஜித் படங்களுக்கு இப்படியான ஒரு அப்டேட் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், 'விடாமுயற்சி' படத்திற்கு இப்படி அடுத்தடுத்து புகைப்படங்களுடன் கூடிய அப்டேட் கிடைத்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.