ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பாரத பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த வீடியோ, போட்டோ சமீபத்தில் வெளியானது. இதனை மாலத்தீவு அமைச்சர்கள், எம்.பிக்கள் விமர்சனம் செய்தனர். பிரதமரை அவதூறு செய்து கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தினர். இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவு செல்வதையும், அங்கு ஓட்டல்களில் முன்பதிவு செய்து இருந்ததையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனாவும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பிக்பாஸ் மற்றும் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்ல இருந்தேன். தற்போது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டேன். பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதை செய்யவில்லை. நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பின் விளைவுகளை மாலத்தீவு சந்தித்து வருகிறது. இதனாலேயே நானும் பயணத்தை ரத்து செய்தேன். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்ல இருக்கிறேன்'' என்றார்.