ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
இயக்குனர் த்ரி விக்ரம், நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிகா - ஹசைன் நிறுவனம் தயாரித்த இப்படம் நேற்று ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது இத்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 94 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மகேஷ்பாபுவின் படங்களில் இந்த படம் தான் முதல்நாள் வசூலில் அதிகம் என கூறப்படுகிறது.